TRENDING

Tamil » News

மலிவு விலை திட்டம்: ரூ.500-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஜியோ திட்டங்கள்!

Updated: Tuesday, June 16, 2020, 20:03 [IST]

AddThis Website Tools

ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை வெவ்வேறு விலையில் வழங்கி வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் போட்டிப்போட்டுக் கொண்டு திட்டங்களை அறிவித்துக் கொண்டே வருகிறது.

வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் திட்டம்

தொலைத் தொடர்புநிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் நோக்கிலும் அதிகரிக்கும் நோக்கிலும் திட்டங்களை அறிவித்துக் கொண்டே வருகிறது. இதில் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் மலிவு விலை திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

மறுபயன்பாடு செய்யக்கூடிய ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட்! தயாரிப்பை முடுக்கிவிடும் எலன் மஸ்க்‌‌..https://tpc.googlesyndication.com/safeframe/1-0-37/html/container.html?n=0ஜியோ வழங்கும் ரூ.98 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.98 திட்டத்தில் மொத்தமாக 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும், அதேபோல் ஜியோ டூ ஜியோ அன்லிமிட்டெட் குரல் அழைப்புகள் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.149 விலையில் கிடைக்கும் திட்டம்

அதேபோல் ரூ.129-க்கு வழங்கப்படும் திட்டத்தில் 2ஜிபி டேட்டா 28 நாட்ககள் செல்லுபடியாகும் நாட்கள் வரை ஜியோ டூ ஜியோ அன்லிமிட்டெட் குரல் அழைப்போடு வருகிறது. பிற நிறுவன குரல் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள் அழைக்கப்படுகிறது. 149 விலையிலும் தினசரி 1.5 ஜிபி டேட்டா 24 நாட்கள் செல்லுபடியாகும் ஜியோ டூ ஜியோ வரம்பற்ற குரல் அழைப்புகள், பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 300 நிமிட குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது.தினசரி 1.5 ஜிபி டேட்டா

ரூ.199-திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா என 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ டூ ஜியோ வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் பிற தொலைத் தொடர்பு நிறுவன அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள் குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. அதேபோல் ரூ.249 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் ஜியோ டூ ஜியோ வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் பிற தொலைத் தொடர்பு நிறுவன அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம்

ரூ.329 திட்டத்தில் மொத்தமாக 6 ஜிபி டேட்டா 84 நாட்கள் செல்லுபடியாகும் நாட்கள் ஜியோ டூ ஜியோ அன்லிமிட்டெட் குரல் அழைப்பு மற்றும் 3000 நிமிடம் பிற நிறுவன அழைப்புகளும் வழங்கப்படுகின்றன. ரூ.349 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா 28 நாட்கள் வழங்கப்படுகிறது அதேபோல் அன்லிமிட்டெட் ஜியோ டூ ஜியோ குரல் அழைப்புகள் மற்றும் 1000 நிமிடங்கள் பிற தொலைத் தொடர்பு நிறுவன அழைப்புகளும் வழங்கப்படுகின்றன.

அமேசான் ப்ரைம் ஒரு வருடம் இலவசம்: ஜியோ பயனரா நீங்கள்?தினசரி 1.5 ஜிபி டேட்டா

Leave a comment